‘திரௌபதி 2’ படத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு!

0
46

திரெளப​தி-2 படத்தை வெளி​யிட தடை விதிக்க உயர் நீதி​மன்​றம் மறுத்​து​விட்​டது. மதுரை மாவட்​டம் மேலூரை சேர்ந்த மகா​முனி அம்​பல​காரர், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: திரு​வண்​ணா​மலையை தலை​மை​யிட​மாக கொண்டு 14-ம் நூற்​றாண்​டில் ஆட்சி புரிந்த மன்​னன் வீர வல்​லாள தேவன். இவரின் வாழ்க்கை வரலாறு அடிப்​படை​யில் திரௌபதி-2 படம் தயாரிக்​கப்​பட்​டுள்​ள​தாக படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

வீர வல்​லாள தேவன் என்​பவர் கள்​ளர் சமூகத்​தைச் சேர்ந்​தவர் என்​ப​தற்கு பல கல்​வெட்​டு​கள், செப்பு பட்​ட​யங்​கள் உள்​ளிட்ட வரலாற்று ஆவணங்​கள் உள்​ளன. ஆனால், திரெளப​தி-2 படத்​தில் வீர வல்​லாள தேவனை வன்​னியர் சமூகத்​தைச் சேர்ந்​தவ​ராக இயக்​குநர் மோகன் சித்​தரித்​துள்​ளார்.

திரைப்​படத்​தின் சுவரொட்​டிகளில் வீர வல்​லாள தேவன் என்​பதை வீர வல்​லா​ளன் என்று மட்​டும் குறிப்​பிட்​டுள்​ளனர். இது உள்​நோக்​கம் கொண்​டது. மேலும், கள்​ளர் சமூகத்​தினரிடையே கொந்​தளிப்பை ஏற்​படுத்​தும். இதை கண்​டித்து மேலூரில் பல போராட்​டங்​கள் நடத்​தப்​பட்​டன.

இந்​நிலை​யில், படத்​துக்கு அவசர அவசர​மாக ‘யு/ஏ’ சான்​றிதழை தணிக்கை வாரி​யம் வழங்​கி​யுள்​ளது. யு/ஏ சான்​றிதழை திரும்​பப் பெறு​மாறு தணிக்கை வாரி​யத்​திடம் மனு அளித்​தும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here