அமெரிக்காவில் நடைபெறவுள்ள 41வது திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில், இலங்கையழகி சபீனா யூசுப் (Sabina Yusuf) இன்று,(21) அதிகாலை நாட்டை இருந்து புறப்பட்டார்.
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இந்த அழகிப் போட்டியில் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் எதிர்பார்ப்புடன் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
விமான நிலையத்தில் ஊடகங்களிடம் பேசிய அவர், தனது வெற்றிக்கு நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.





