ஆஸ்கர் விருதுகளின் 98 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை எந்தவொரு திரைப்படமும் செய்யாத சாதனையை ‘சின்னர்ஸ்’ திரைப்படம் நிகழ்த்தியுள்ளது.
இன்று (ஜனவரி 22) வெளியிடப்பட்ட 2026-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில், இந்தப் படம் மொத்தம் 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக ‘ஆல் அபௌட் ஈவ்’ (1950), ‘டைட்டானிக்’ (1997) மற்றும் ‘லா லா லேண்ட்’ (2016) ஆகிய படங்கள் தலா 14 பரிந்துரைகளைப் பெற்றதே சாதனையாக இருந்தது.




