பயிற்சியை தொடங்கிய தோனி? சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம்!

0
15

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்கியுள்ளார். ஐபிஎல் 2026 போட்டிகளுக்காக தோனி பயிற்சியைத் தொடங்கியிருப்பதாக யூகங்கள் பரவுவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தோனி பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் புகைப்படத்தை ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டு, “யார் பயிற்சி பெறுகிறார்கள் என்று பாருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது. இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க அதிகாரியுமான சவுரவ் திவாரியுடன் தோனி உரையாடும் காட்சியும் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26 முதல் மே 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 2020-ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here