ஜனநாயக அமைப்பில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் தூண்களில் நான்காவது தூணாக அமைந்திருக்கும், நிறைவேற்று அதிகாரம், சட்டமியற்றல் மற்றும் நீதித்துறையைப் பாதுகாக்கும் காவல் தெய்வங்களாக சுதந்திர ஊடகங்களை அழைக்கலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கத்தின் வருடாந்த சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி இன்று (25) கோட்டே அங்கம்பிட்டிய மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
சுதந்திர ஊடகத்தால் நல்ல நாடு உருவாகி, அதிகாரங்களுக்கு இடையிலான தடைகள் மற்றும் சமன்பாட்டு முறையை அது வலுப்படுத்தி, நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதனால், ஒரு தொழிலாக இது சிறந்ததொரு பணியைச் செய்து வருகின்றது.
இதன் பொருட்டு ஊடகவியாளர்களை பாராட்டுகிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.





