புகைப்படம் எடுக்கும் பெயரில் இடுப்பில் கை வைத்த ஆண்கள்… உறைந்துபோன பிரபல நடிகை!

0
48

‘நாகினி’ தொடரின் மூலம் நடிகை மௌனி ராய் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். இத்தொடர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது. அவ்வப்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் போட்டோஷூட் தரிசனம் தருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்திய ஆல்பம் மூலமும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளார் மெளனி ராய். இவர் ‘விஸ்வம்பரா’ படத்தின் சிறப்பு பாடலில் சிரஞ்சீவியுடன் இணைந்து நடனமாடியுள்ளார்.

சமீபத்தில் அவர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில், அவருக்கு ஏற்பட்ட மோசமான சம்பவத்தை அவருடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், “கர்னால் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தேன். அங்கு வந்திருந்தவர்கள் செய்த செயல் என்னை அதிர்ச்சியடையச் செய்தது.நிகழ்ச்சி தொடங்கியபோது மேடைக்குச் செல்லும்போது, ஆண்கள் பலரும் புகைப்படம் எடுக்கும் பெயரில் என் இடுப்பில் கை வைத்தனர். ‘சார், உங்கள் கையை எடுங்கள்’ எனச் சொன்னேன். அது அவர்களுக்கு பிடிக்கவில்லை.மேடையில் அவர்கள் ஆபாசமான வார்த்தைகளைப் பேசினர். ஆபாச கை சைகைகள் காட்டினர். முதலில் அமைதியாக சைகை செய்து நிறுத்தச் சொன்னேன்.

நிகழ்ச்சியின் நடுவே மேடையை விட்டு வெளியேற முயன்றேன். ஆனால் உடனடியாகத் திரும்பி வந்து நிகழ்ச்சியை முடித்தேன். அதன் பிறகும் அவர்கள் நிறுத்தவில்லை. அங்கிருந்தவர்கள் எவரும் அவர்களை அப்புறப்படுத்தவில்லை.என்னைப் போன்ற ஒருவரே இப்படி அனுபவிக்க வேண்டியிருந்தால், புதிதாக வரும் பெண்கள் என்ன அனுபவிப்பார்களோ என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை.நான் அவமானப்பட்டு, அதிர்ச்சியடைந்துள்ளேன். இத்தகைய விஷயத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் கலைஞர்கள், நேர்மையாக எங்கள் கலை மூலம் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முயல்கிறோம். இவர்களின் மகள், சகோதரிகளுக்கு இதே போல் நடந்தால் என்ன செய்வார்கள்? உங்களை நினைத்து அவமானப்படுகிறேன்” என கூறியுள்ளார்.

dailythanthi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here