‘பிரேமம்’ படம் மூலம் அறிமுகமான நடிகைகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். தனுஷ் நடித்த ‘கொடி’ மூலம் தமிழுக்கு வந்த இவர், தள்ளிப் போகாதே, சைரன், டிராகன், பைசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வரும் இவர், நடித்துள்ள ‘லாக்டவுன்’ படத்தை அறிமுக இயக்குநர் ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார். இதில், சார்லி, நிரோஷா, மஹானா சஞ்சீவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரகுநந்தன், சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர்.
லைகா தயாரித்துள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் பலமுறை அறிவிக்கப்பட்டது. முன்னதாக டிச.5-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் டிச.12-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுத் தள்ளிப்போனது. இந்நிலையில், ஜன.30ம் தேதி வெளியாகும் என இப்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.





