நடிகை ராஷி கன்னா, தனக்கு 6 மொழிகள் தெரியும் என்று பெருமைபடக் கூறினார். தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘அடங்கமறு’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘அரண்மனை 4’, ‘சர்தார்’ உள்பட சில படங்களில் நடித்துள்ள இந்தி நடிகையான ராஷி கன்னா, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
மொழிகளைப் படிப்பது எனக்குப் பிடிக்கும். அதை ஒரு வேலையாகச் செய்து வருகிறேன். இந்தி, ஆங்கிலத்தை அடுத்து தெலுங்கு, தமிழ் மொழிகளை நன்றாகப் பேசுவேன். இப்போது பஞ்சாபியும் பேசக் கற்றுள்ளேன்.





