இந்து இளைஞர் எரித்துக் கொலை – வங்​கதேசத்​தில் கொடூரம்!

0
32

வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தால் பிரதமர் ஷேக் ஹசீ​னா பதவி விலகி இந்​தி​யா​வில் தஞ்​சமடைந்​தார். இதையடுத்து முகமது யூனுஸ் தலை​மையி​லான இடைக்​கால அரசு பொறுப்​பேற்​றது. அதன் பிறகு இந்​துக்​கள் உள்​ளிட்ட சிறு​பான்​மை​யினர் மீதான தாக்​குதல்​கள் அதி​கரித்​துள்​ளது.

பிப்​ர​வரி 12-ம் தேதி வங்​கதேசத்​தில் பொதுத்​தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில், கடந்த சில மாதங்​களாக இந்​துக்​கள் அடுத்​தடுத்து படு​கொலை செய்​யப்​பட்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில், வங்​கதேசத்​தின் நரசிங்​கடி நகரில் நேற்று முன்​தினம் இரவு சஞ்​சல் பவுமிக் (25) என்ற இளைஞர் கேரேஜுக்​குள் உறங்​கிக் கொண்​டிருந்​த ​போது எரித்துக் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து நரசிங்​கடி காவல் கண்​காணிப்​பாளர் அப்​துல்லா அல் ஃபாரூக் கூறும்​போது, “சம்பவ இடத்​துக்கு அரு​கில் ஒரு நபர் சந்​தேகப்படும் வகை​யில் நடமாடியது சிசிடிவி காட்​சிகளில் பதி​வாகி​யுள்​ளது. இதுகுறித்து விசா​ரித்து வரு​கிறோம்” என்​றார்.

முகமது யூனுஸ் தலை​மையி​லான இடைக்​கால அரசின் காலத்​தில் சிறு​பான்​மை​யினருக்கு எதி​ராக 2,900-க்​கும் மேற்​பட்ட வன்​முறைச் சம்​பவங்​கள் நடந்​துள்​ள​தாக இந்​திய வெளி​யுறவு அமைச்​சகம் சுட்​டிக்​காட்​டி​ கண்டனம் தெரிவித்துள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here