ரசிகர்களின் அன்பு தான் என் தேடல்!

0
55

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்த ‘விடுதலை’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் பவானி ஸ்ரீ. இவர் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமாரின் தங்கையும் ஆவார்.

சமீபத்தில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஷ்வின், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தில் பவானி ஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

பவானி ஸ்ரீ கூறும்போது, “தமிழில் ஓரிரு படங்களே நடித்தாலும் ரசிகர்கள் என் மீது காட்டி வரும் அன்பு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இந்த அன்பு தான் கலைஞர்களை உற்சாகப்படுத்தும் விஷயமாகும். ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் வெற்றி எனக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

ரசிகர்களின் அன்பு தான் என் தேடல். அதை நோக்கியே என் பயணம் இருக்கும். ரசிகர்களின் அன்புக்குரியவளாக இருக்க என் கடமையை சரியாக செய்வேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here