தமிழகத்திலிருந்து திருடப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த 3 சோழர் காலச் சிலைகளை ஒப்படைக்க அமெரிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் சோழர் மற்றும் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த சிலைகள் திருடப்பட்டு, அமெரிக்காவின் வெஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, தங்கள் சிலைகளை ஒப்படைக்குமாறு அமெரிக்கா மீது இந்தியா குற்றம் சாட்டியது.
இந்த நிலையில், இந்தச் சிலைகளை இந்தியாவிடமே ஒப்படைக்க ஸ்மித்சோனியன் அருங்காட்சியகம் ஒப்புக்கொண்டுள்ளது.




