“வாய்ப்பு கேட்க போனா, கிளாமர் கேட்டாங்க!” – ஐஸ்வர்யா ராஜேஷ்!

0
30

கிளாமராக உடைகள் அணிந்து வர சொன்னதாக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ‘காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவரது நடிப்பில் சமீபத்தில் ‘தீயவர் குலை நடுங்க’ என்ற படம் வெளியானது. அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, பரத் தர்ஷனின் இயக்கத்தில் ஓ… !சுகுமாரி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஒரு பேட்டியில், தயாரிப்பாளர் ஒருவர் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில்,

“எனது ஆரம்ப காலத்தில் ஒரு தயாரிப்பாளரை சந்தித்து வாய்ப்பு கேட்க சென்றேன். போய் கிளாமரா உடைகள் அணிந்து வா, உனது உடல் அழகை பார்த்த பின்னர் முடிவெடுக்கிறேன் என்றார்,” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here