டி20 உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

0
8

டி20 உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அணியின் தலைவராக தசுன் ஷானக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பத்துதம் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, சரித் அசலங்க, கமில் மிஷாரா, பவன் ரத்நாயக்க, ஜனித் லியனகே, தசுன் ஷானக (தலைவர்), கமிந்து மெண்டிஸ், துஷ்மந்த சமீர, மதிஷா பதீரனா, எஷான் மலிங்க, வனிந்து ஹசரங்க, மஹிஷ் தீக்ஷனா, துனித் வெல்லலகே ஆகியோர் உள்ளடங்கிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் தேர்வுக் குழுவால் மத்திய வரிசையை வலுப்படுத்த முன்மொழியப்பட்ட தனஞ்சய டி சில்வா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
எனினும், கமிந்து மெண்டிஸ் அணிக்கு மீளவும் அழைக்கப்பட்டுள்ளார்.

இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடருக்கு பவன் ரத்நாயக்க அழைக்கப்பட்டது கடைசி நிமிட முடிவாகக் கருதப்படுகிறது. பிரமோத் மதுஷனுக்குப் பதிலாக அவர் அழைக்கப்படுகிறார்.

நேற்றைய போட்டியில் காயமடைந்து மைதானத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான எஷான் மலிங்கா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

துனித் வெல்லலகே, வனிந்து ஹசரங்க மற்றும் மஹிஷ் தீக்ஷனா ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாக அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

டி20 உலகக் கிண்ண தொடரில் குழு பீ இல் இடம்பெற்றுள்ள இலங்கை அணி எதிர்வரும் எட்டாம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடவுள்ளது.

16ஆம் திகதி அவுஸ்திரேலியா அணியை இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here