ஐ.நா வதிவிடப் பிரதிநிதி பதுளையில் கள விஜயம்!

0
161
மலையக மீள் கட்டமைப்புக்கான சிவில் சமூக கூட்டிணைவு அழைப்பின் பெயரில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே பிராஞ்சை (Marc-André Franche), பதுளை மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து டித்வா பேரிடருக்கு பின்னர் மலையக மக்கள் கொடுத்துவரும் இன்னல்கள், பாகுபாடான அரச சேவை, பொது நீரோட்டத்தில் இணைத்து செயல்படாது ஓரங்கட்டல் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பெருந்தோட்ட மக்களை சந்தித்து நடைமுறை நிலைகள் குறித்து மக்களுடன் கலந்துரையாடினார்.
தற்போது மக்கள் தங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலை குறித்து மேலும் மக்களுடன் கலந்துரையாடினார்.
கல்வி, சுகாதாரம், காணி, வீடு மற்றும் பொருளாதார ரீதியான விடயங்கள் சம்பந்தமாக தங்களுக்கு நேர்ந்துள்ள பாகுபாடு குறித்து பொதுமக்கள் எடுத்துரைத்தனர். இந்த சந்தர்ப்பத்தில் பதுளை மாவட்டத்தில் உள்ள சிவில் அமைப்புகளும், சிவில் சமூக ஆர்வலர்களும் பங்கேற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here