இந்தியா-பாக் சண்டையின் போது 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன; டிரம்ப்

0
27

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தான் சமாதான தூதுவராக செயல்பட்டு, இரு நாடுகளுக்கிடையே ஏற்பட இருந்த பெரும் போரை தடுத்ததாக மீண்டும் மீண்டும் கூறிவருகிறார். கடந்த ஆண்டு மே மாதம் முதல் இதுவரை 90-க்கும் மேற்பட்ட முறை இதை தெரிவித்துள்ளார். இந்த மோதலின் போது இந்தியாவின் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஆனால் 3-ம் தரப்பு தலையீட்டை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் அணு ஆயுதப் போராக மாறியிருக்கலாம் என்றும், இதனை தடுத்து கோடிக்கணக்கான மக்களை காப்பாற்றியதாக டிரம்ப் 91-வது முறையாக தெரிவித்துள்ளார். இந்த முறை 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் 8 போர்களை தீர்த்தேன். இதில் 6 போர்கள் வர்த்தக வரிகள் காரணமாகவே தீர்க்கப்பட்டன. ‘நீங்கள் இந்த போரை முடிக்கவில்லை என்றால், நான் உங்களிடம் கூடுதல் வரிகளை விதிக்கப் போகிறேன்’ என்று கூறினேன். அவர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்து போரை நிறுத்தினர். ‘டிரம்ப் எங்கள் மோதலை நிறுத்தி வைத்து மக்கள் உயிர்களை காப்பாற்றினார்’ என பாகிஸ்தான் பிரதமரே கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here