சஜித்தை சித்தரிப்பது போன்ற ஆணுறை ஊக்குவிப்புச் செய்தி – இணையத்திலிருந்து நீக்கியது சுகாதார அமைச்சு!

0
13

சுகாதார அமைச்சு ஆணுறை பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்த சர்ச்சைக்குரிய பதிவை எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து நீக்கியுள்ளது.

அவசர கர்ப்பத் தடுப்பு மாத்திரைகளை நம்பாமல் ஆணுறை பயன்படுத்த வேண்டும் என்ற செய்தியை பரப்பும் நோக்கில் வெளியிடப்பட்ட அந்தப் பதிவில், குறுகிய மர பலகையை கடக்க முயலும் ஒருவரின் ஓவியம் இடம்பெற்றிருந்தது.

அந்த ஓவியம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஒத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரத்தை அரசியல் நோக்கில் பயன்படுத்தியதாக விமர்சனங்கள் அதிகரித்தன.

இதையடுத்து முதலில் ஓவியத்தில் இருந்த மனித உருவம் நீக்கப்பட்டு, பின்னர் முழுப் பதிவும் அகற்றப்பட்டது. இதுகுறித்து சுகாதார அமைச்சு இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியிடவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here