மக்கள் குரல் அமைப்பி பிரதிநிதிகள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சந்திப்பு!

0
32

மக்கள் குரல் (Mahajana Handa) இயக்கத்தின் பிரதிநிதிகள் இன்று (25) முற்பகல் கொழும்பு, பிளவர் வீதியில் உள்ள அரசியல் அலுவலகத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், 8ஆவது நிறைவேற்று அதிகாரங்கொண்ட முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தனர்.

இந்த நிகழ்வில் பின்வரும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்:

முன்னாள் அமைச்சர்களான பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், மஹிந்த அமரவீர, அனுர பிரியதர்ஷன யாப்பா, உதய கம்மன்பில ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அசங்க நவரத்ன, பிரேமநாத் சி. தொலவத்த , ஜயந்த விஜேசிங்க மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள மற்றும் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here