மேஷம்
உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைச்சுமை கூடும். வியாபாரத்தில் சிறிய முதலீடு செய்யவும். பிள்ளைகளால் பெருமை உண்டு. வெளிநாட்டு முயற்சி பலிக்கும். மாணவர்களின் சுறுசுறுப்பு கூடும். குடும்பத்தில் அன்னியர்களின் தலையீடு உண்டாகும். அவற்றைத் தடுக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
ரிஷபம்
தம்பதிகள் தங்கள் தவறை உணர்வர். பிரிந்தவர்கள் ஒன்று சேருவர். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் நல்லதொரு தொகை கிடைக்கும். அரசு தொடர்பானவைகளில் லாபம் உண்டு. கலைஞர்களுக்கு பாராட்டுகள் குவியும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருக்கு நிலம் மற்றும் மனையால் லாபம் வரும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
மிதுனம்
பெண்கள் ஆலய வழிபாடுகளில் ஈடுபடுவர். மார்கெட்டிங்பிரிவினர் அதிக ஆர்டர்கள் பெறுவர். கணினி துறையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். அழகு நிலையங்கள் ஆரம்பிக்க திட்டமிடுவீர்கள். கணவன், மனைவி ஒற்றுமையாக இருப்பர். வியாபாரம் செழிப்புறும். உடல் நலம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
கடகம்
நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். தந்தைவழி சொத்து கைக்கு வரும். கல்யாணம், கிரகப் பிரவேசத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும். பூர்வீக சொத்தில் உங்களுக்குரிய பங்கு வந்து சேரும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். வரவேண்டிய பணம் இன்று வசூலாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
சிம்மம்
உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். வரவுக்கு சமமாக செலவுகள் இருக்கும். தேகம் பளிச்சிடும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வைப்புத் தொகையாக வங்கியில் டெபாசிட் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கன்னி
பங்குச் சந்தையில் சற்று கூடுதல் கவனம் தேவை. பல காரியங்கள் நிறைவேறும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். எதிரிகள் சரணடைவர். பத்திரிகையாளர்கள் பயன் பெறுவர். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். பல கிளைகள் துவங்க திட்டமிடுவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவர்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
துலாம்
வியாபாரிகள் வெளியூர் பயணம் செல்வர். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. தம்பதிகளிடையே நல்ல புரிதல் உருவாகும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பொதுநலத் தொண்டாளர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். முதுகு தண்டில் வலி வந்து போகும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
விருச்சிகம்
நிலத்தை விற்ற பணத்தை கொண்டு புதிய சொத்தினை வாங்குவீர்கள். மகன் சம்பந்தமாக இனிக்கும் செய்தி கிடைக்கும். பணப்பொறுப்புகளை கையாள்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். தம்பதிகளின் அன்யோன்யம் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்
தனுசு
பற்று வரவு வசூலாகும். உத்யோகத்தில் உள்ளவர்கள் நல்ல சம்பளம் காண்பார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை நம்புங்கள். நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். உடல் நலனில் கவனம் வேண்டும். வெளி உணவுகளை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
மகரம்
வேலை பார்க்கும் இடத்தில் உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை மேலோங்கும். பிள்ளைகள் மேற்படிப்பை துவங்குவர். இடம், மனையால் லாபம் வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி தேடி வரும். பங்குச் சந்தை லாபம் தரும். உடல் நலம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
கும்பம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: கிரே
மீனம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். உடலில் கை, கால், மூட்டு வலி வந்து போகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை




