புதிய சாதனை படைத்த பின் ஆலன்!

0
5

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிகட்ட ஆட்டங்கள் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் நியூசிலந்து அணியில் பின் ஆலன் 33 பந்துகளில் சதம் அடித்து வெற்றிக்கு உதவினார்.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதம் அடித்து வீரர் என்ற சாதனையை படைத்தார்பின் ஆலன் . இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு உலகக் கோப்பையில் வெஸ்ட்இண்டீசின் கிறிஸ் கெய்ல் இங்கிலாந்துக்கு எதிராக 47 பந்தில் சதம் அடித்ததே அதிவேக சதமாக இருந்தது.

உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமைக்கும் பின் ஆலென் சொந்தக்காரர் ஆனார்.நடப்பு உலகக் கோப்பையில் பின் ஆலென் மொத்தம் 20 சிக்சர் நொறுக்கி யுள்ளார். உலகக் கோப்பை தொடர் ஒன்றில் அதிக சிக்சர் அடித்தவராகவும் திகழ்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here