டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 2-வது வீரர் – ’பெத்தேல்’ சாதனை!

0
5

டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

இதில் ஜேக்கப் பெத்தேல் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். நிலைத்துப் பேட்டிங் செய்த அவர் சதம் அடித்து அசத்தினார். கடைசி வரை போராடிய பெத்தேல் 105 ரன்களில் ரன் அவுட் ஆக இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 2-வது வீரர் – ’பெத்தேல்’ சாதனை
இந்தப் போட்டியில் ஜேக்கப் பெத்தேல் 45 பந்துகளில் 105 ரன்கள் அடித்தார். இதன் மூலம் , டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 2வது அதிவேக சதத்தை அவர் பதிவு செய்தார். இதற்கு முன் நடைபெற்ற முதல் அரையிறுதியில் தென் அப்பிரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்தின் ஆலன் 33 பந்துகளில் சதம் அடித்து முதல் அதிவேக சதத்தை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here