பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி!

0
12

வங்காளதேசத்துக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி மிர்புரில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் மெஹிதி ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் வங்காளதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. பாகிஸ்தான் அணியில் பஹீம் அஸ்ராப் மட்டும் நிலைத்து விளையாடி 37 ரன்கள் எடுத்தார்.

இதனால் பாகிஸ்தான் அணி 30.4 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்காளதேச அணியில் நஹித் ராணா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து விளையாடிய வங்காளதேச அணி தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடியது. வங்காளதேச அணி 15.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here