டி20 உலகக் கோப்பை தேர்வின்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் பாபர் அஸாம், ஃபகர் ஸமான் உடற்தகுதியின்றி இருந்ததாக சந்தேகம் எழுந்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்றது. இதில் இந்தியா சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது. பாகிஸ்தான் அணி, சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியது
இந்நிலையில் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் 100 சதவீத உடற்தகுதியுடன் இருந்தார்களா என்று தேர்வுக்குழு மூத்த உறுப்பினர் ஆகிப் ஜாவித் சந்தேகம் எழுப்பியிருந்தார். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய மருத்துவக் குழுவில் பிரிட்டனைச் சேர்ந்த டாக்டர் ஜாவேத் முத்கல் இணைந்துள்ளார்.
இதுதொடர்பாக டாக்டர் ஜாவேத் முத்கலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாவது: அணியில் இடம்பெற்றிருந்த பாபர் அஸாம், ஃபகர் ஸமான் ஆகியோர் 100 சதவீத முழு உடற்தகுதியுடன் இல்லை. உலகக் கோப்பை போட்டிக்குப் பின்னர் அவர்களை பரிசோதித்த டாக்டர் ஜாவேத் முத்கல், இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.




