ஐபிஎல் 2026 சீசன் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளநிலையில், பல வெளிநாட்டு வீரர்கள் தொடரில் இருந்தும் சிலர் துவக்க போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளனர். அதில் ஒருவர் பெங்களூரு அணியின் ஜோஷ் ஹேசில்வுட். கடந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி ஷெபீல்ட் ஷீல்ட் தொடர் போட்டியில் ஹாம்ஸ்ட்ரிங் காயம் அடைந்ததிலிருந்து எந்தப் போட்டியிலும் அவர் விளையாடவில்லை. இதனால், சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையையும் அவர் தவறவிட்டார்.




