அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் டீசர் வெளியீடு!

0
2

தமிழில் ‘மாஸ்டர்’, ‘கைதி’, ‘விக்ரம்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ஜுன் தாஸ். அதனை தொடர்ந்து ‘அநீதி’, ‘ரசவாதி’, ‘போர்’ போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது அர்ஜுன் தாஸ், நடிகை அதிதி ஷங்கர் உடன் இணைந்து ‘ஒன்ஸ் மோர்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.

‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார். மேலும், பிரபல இசையமைப்பாளர் ஹேஷாம் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இதனால் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில், ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளனர். மலையாள நடிகை சோனா ஓலிக்கல் என்பவரை அறிமுகம் செய்து இந்த டீசரை வெளியிட்டுள்ளனர். இந்தபடத்தில் நடிகை சோனா ஓலிக்கல் ‘இந்திரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் வெயில் (2022), கடகன் (2024) மற்றும் ஓ மேரி லைலா (2022) போன்ற மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து, ‘ஒன்ஸ் மோர்’ படத்தில் இடம்பெற்றுள்ள அடுத்த பாடல் நாளை (5ந் தேதி) மாலை 5 மணியளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here