உலகக்கிண்ணக் காற்பந்து திருவிழா ரத்து – ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!

0
14
www.cp24.com

Toronto நகரில் நடைபெற்ற FIFA Fan Festival உலகக்கிண்ணக் காற்பந்து கொண்டாட்டத்தின் முதல் நாள் நிகழ்வுகள், மின்னல் அபாயம் காரணமாக நடுவிலேயே திடீரென ரத்து செய்யப்பட்டு, அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

Mexico மற்றும் South Africa அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இந்த வெளியேற்றம் நிகழ்ந்தது.

“மக்களின் பாதுகாப்பே தங்களது முதல் முன்னுரிமை” என்பதால், மிகுந்த எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாநகர சபை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்த இடியுடன் கூடிய மழை மேகங்கள் காரணமாகவே இந்த மின்னல் அச்சுறுத்தல் ஏற்பட்டதாக CTV News வானிலை ஆய்வாளர் Lyndsay Morrison தெரிவித்தார்.

மாநகர சபையின் இந்த முடிவால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

“மோசமான வானிலை ஏற்பட்டால், நிகழ்ச்சியை ரத்து செய்வதற்குப் பதிலாக, மாற்று ஏற்பாடு (Plan B) ஒன்றை மாநகர சபை திட்டமிட்டிருக்க வேண்டும்” என ரசிகர்கள் சிலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here