நான் மதிக்கும் ஜனாதிபதி நீங்கள் மட்டும்தான் – அர்ச்சுனா எம்பி பேச்சு!

0
65

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை மாத்திரமே தான் ஜனாதிபதியாக மதிப்பதாக கூறும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராதநாதன் அர்ச்சுனா இந்நாட்டு சிங்கள இனத்தின் மீது உண்மையான பற்று கொண்ட ஜனாதிபதியாகவும் மஹிந்த ராஜபக்‌ஷ மட்டுமே இருந்தார் என்றும் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் இன்று (13) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இதுகுறித்து மேலும் உரையாற்றிய அவர்,

“பாராளுமன்றத்தில் எவ்வித அனுபமும் இன்றி பல தடவைகள் பேசியுள்ளேன். அதற்கு அச்சப்படவில்லை. ஆனால் உங்கள் முன்பாக பேசும் போது அது வேறு விதமான உண்வாக (பீளிங்) ஆக இருக்கிறது. அதனை சொல்வது கஸ்டம்.

உண்மையில் எனக்கு தமிழ் மக்களே வாக்களித்தனர்,  நீங்கள் தீவிரவாதிகள் என்று கூறும் புலிகள் அமைப்பில் எனது தந்தை மூன்றாம் நிலையில் பிரதானியாக பதவி வகித்தார். நான் பிறந்ததிலிருந்து யுத்த காலம் உள்ளடங்களாக  39 வருடங்கள் யாழ்ப்பாணத்திலும்,கடந்த 10 வருடங்கள் களுபோவில, பேராதனையிலும் வைத்தியராக பணியாற்றியுள்ளேன்.

அரசியலுக்கு நான் விரும்பி வரவில்லை.  அரசியலுக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன். வந்த பிறகு, நான் சிறு வயதிலிருந்து சிங்களம் பேச விரும்பினேன். நான் சிறுவனாக இருந்தபோது அதிமேதகு ஜனாதிபதி (மஹிந்த ராஜபக்‌ஷ) தமிழ் பேசும் போது தடுமாற்றம் அடைந்த கதைகளை அடிக்கடி பார்ப்பேன். இன்று அவர் முன்பாக பேச கிடைத்தமைக்கு  கௌரவம் கொள்கிறேன்.

நான் வேறு எவரையும் ஜனாதிபதியாக மதிக்க விருப்பமில்லை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மட்டுமே, சிங்கள மக்களுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் உங்களையே ஜனாதிபதி என்று தெரியும்.

மக்கள்  பொய்களுக்கு ஏமாந்தா ஜனாதிபதிகளை தெரிவு செய்யலாம். ஆனால் மக்கள் தமது இனத்தை ஆதரிக்க வேண்டும் என்று அரசியலுக்கு வந்த பின்பே கற்றுகொண்டேன். தமது இனத்தின் மீது ஆதரவு இருந்தால் மட்டுமே ஏனைய இனங்கள் மீதும் ஆதரவு வரும்.

எனது இனத்தை நான் ஆதரிக்கிறேன். அதேபோல் சிங்களவர்கள் இன்றும் உங்களையே ஆதரிக்கின்றனர்.” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here