தெற்கு ஒண்டாரியோவில் (Southern Ontario) வசிக்கும் பொதுமக்கள் இந்த வாரம் முழுவதும் பரவலாக பெய்யவுள்ள தொடர் மழையுடன் கூடிய வானிலையை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் தினமும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் மேகமூட்டத்துடன் கூடிய வெயில் நிலவக்கூடும்.
இந்த வாரம் முழுவதும் வெப்பநிலை 22 முதல் 23 பாகை செல்சியஸ் வரை பதிவாகலாம்.
எனினும், காற்றில் ஈரப்பதம் (humidity) அதிகமாக இருப்பதால் வெப்பத்தின் தாக்கம் சற்று கூடுதலாக உணரப்படும்.
வெள்ளிக்கிழமை இரவு வேளையில் இந்த வாரத்தின் மிகக் குறைந்த வெப்பநிலையாக 11 பாகை செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தெற்கு ஒண்டாரியோவின் சில பகுதிகளில் 50 மில்லிமீட்டர் வரை பலத்த மழை பெய்ததால், அங்கு சிறப்பு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மழை நீர் தேங்குதல் அல்லது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், தாழ்வான பகுதிகளில் (low-lying areas) வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறும், அங்கு செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.




