கனடாவின் றொரண்டோ (Toronto) நகரின் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில், டர்ஹாம் (Durham) போக்குவரத்து பஸ்ஸில் முஸ்லிம் பெண் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வெறுப்புணர்வு கலந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் 36 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பஸ்ஸில் பயணித்த நபர் ஒருவர், அங்கிருந்த முஸ்லிம் பெண்ணை நோக்கி இஸ்லாமியர்களுக்கு எதிரான அவதூறு வார்த்தைகளைப் பேசியதுடன், அவரை எட்டி உதைத்துத் தாக்கிவிட்டு பஸ்ஸை விட்டு இறங்கிச் சென்றுள்ளார்.
அதில், அந்த நபர் பெண்ணைத் திட்டுவதும், “பயங்கரவாதம்” (Terror) என்ற வார்த்தையைக் கூறி அவரை உதைக்கப் பாய்வதும் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து றொரண்டோ பொலிஸார் (Toronto Police) தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கனடிய முஸ்லிம்களின் தேசிய கவுன்சில் (National Council of Canadian Muslims – NCCM) இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோவை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளது.
எதிர்காலத்தில் இது போன்ற சம்வங்கள் கொலையாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளதெனவும், இவ்வாறான வெறுப்புணர்வு சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகவும் அந்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.




