டக் போர்ட் மற்றும் ஊடகவியலாளர்கள் இடையே காரசாரமான விவாதம்!

0
2
toronto.citynews.ca

வீட்டுவசதித் துறைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில்ஒன்ராறியோ (Ontario) மாகாண முதல்வர் டக் போர்ட் (Doug Ford) மற்றும் ஊடகவியலாளர்கள் இடையே கடுமையான விவாதம் ஏற்பட்டுள்ளது.

மாகாண நாடாளுமன்றத்திற்கு 21 வாரங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில்இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சமீபத்திய கருத்துக்கணிப்பில் டக் போர்ட் (Doug Ford) இன் மக்கள் ஆதரவு 21 சதவீதமாகக் குறைந்துள்ளதாக வெளியான தகவல் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதனால் அதிருப்தியடைந்த அவர், “இன்று தேர்தல் நடந்தால் நாங்கள் மீண்டும் ஒரு பிரம்மாண்ட பெரும்பான்மையுடன் (Super majority) ஆட்சியமைப்போம் என்றார்.

தேர்தல் நாளன்று மட்டுமே கருத்துக்கணிப்புகள் உண்மையானவை” என்றும் அவர் பதிலளித்தார்.

அத்துடன்தனது கட்சியின் உள்ளன கருத்துக்கணிப்பில் 41 சதவீத ஆதரவு இருப்பதாகக் கூறிபில்லி பிஷப் றொரண்டோ சிட்டி ஏர்போர்ட் (Billy Bishop Toronto City Airport) விரிவாக்கத் திட்டம் மிகவும் பிரபலமானது என்றும் அவர் வாதிட்டார்.

தொடர்ந்துஸ்கார்பாரோ (Scarborough) தொம்சன் மெமோரியல் பூங்காவில் (Thomson Memorial Park) நடைபெற்ற போர்ட் பெஸ்ட்‘ (Ford Fest) குடும்ப விழாவில் OPSEU தொழிற்சங்கத்தினர் நடத்திய போராட்டங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு, போராட்டக்காரர்கள் சிறுவர்கள் முன்னிலையில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்திவிருந்தினர்களை அச்சுறுத்தியதாக போர்ட் (Ford) குற்றம் சாட்டினார்.

ஊடகவியலாளர்களின் அடுத்தடுத்த கேள்விகளால் பொறுமையிழந்த முதல்வர், “நீங்கள் அனைவரும் என்னை மேடைக்கு அழைத்ததில் இருந்து தொடர்ந்து தாக்கி மட்டுமே பேசுகிறீர்கள்” என்று சாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here