ஏடிஎம் கொள்ளை – ஆற்றில் நீந்தி தப்பிய திருடன் – பொலிஸார் வலைவீச்சு!

0
3
www.ctvnews.ca

கனடாவின் கேம்லூப்ஸ் (Kamloops) நகரில் உள்ள பப் (Pub) ஒன்றில் இருந்து ஏடிஎம் (ATM) இயந்திரத்தை திருடிச் சென்ற இருவரில், ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மற்றொருவர் ஆற்றில் நீந்தி தப்பியோடியதால் அவரைத் தேடி வருகின்றனர்.

வெஸ்ட்சைட் ரோட்டில் (Westsyde Road) உள்ள ஒரு பப் பகுதிக்குள் நுழைந்த இருவர், அங்கிருந்த ஏடிஎம் இயந்திரத்தை திருடிக்கொண்டு, திருடப்பட்ட டிரக் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் அந்த டிரக் மற்றும் ஏடிஎம் இயந்திரத்தை போலீஸார் மீட்டபோதும், அதற்குள் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

மோப்ப நாயின் உதவியுடன் போலீஸார் திருடர்களைப் பின்தொடர்ந்தபோது, அவர்கள் இருவரும் தாம்சன் ஆற்றில் (Thompson River) குதித்துள்ளனர்.

அவர்களில் ஒருவரை ஆற்றினுள்ளேயே போலீஸார் கைது செய்தனர். ஆனால், மற்றொருவர் ஆற்றைக் கடந்து நீந்தி தப்பியோடினார்.

தாடி மற்றும் தலையில் வழுக்கையுடைய ஒரு வெள்ளை இனத்தவர்.

அவரது வலது கை மற்றும் தோள்பட்டையில் டாட்டூ (Tattoo) குத்தப்பட்டுள்ளது.

அப்பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருடன் இணைந்து (Kamloops Fire and Rescue) தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டும் அவர் இன்னும் சிக்கவில்லை.

நோர்த் தாம்சன் ஆற்று (North Thompson River) பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த நபரைக் கண்டால் உடனே  பொலிஸாருக்கு (Kamloops RCMP) தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here