அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் வசித்து வந்த இந்திய ஐ.டி. ஊழியரான வெங்கடேஷ் தொப்பலபுடி (வயது 33), ஹூஸ்டன் நகரிலிருந்து காரில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது கன்சாஸ் மாகாணத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் திடீர் பெருவெள்ளம் ஏற்பட்டது. வெல்லிங்டன் பகுதியில் உள்ள பாலம் அருகே வெங்கடேஷின் கார் சென்றபோது, சீறிப்பாய்ந்து வந்த வெள்ளநீர் காரை அப்படியே இழுத்துச் சென்றது.
காரினுள்ளேயே அவர் மாட்டிக்கொண்டதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் மீட்புப் படையினரால் உடனடியாக தண்ணீருக்குள் இறங்க முடியவில்லை.
இதையடுத்து, ஹெலிகாப்டர் மற்றும் டிரோன் கேமராக்கள் மூலம் தீவிரமாக தேடியதில், வெங்கடேஷ் வெள்ளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து ஹூஸ்டனில் உள்ள இந்திய தூதரகம் கவலை தெரிவித்துள்ளதோடு, அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வரத் தேவையான சட்டப்பூர்வ உதவிகளைச் செய்து வருவதாக தெரிவித்துள்ளது.




