சிறைச்சாலையில் அமைதியின்மை – பாராளுமன்ற விவாதமொன்று வேண்டும்!

0
39

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் மோதல்களால் உருவான நிலைமை குறித்து பாராளுமன்ற விவாதமொன்று நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்னவுக்கு இன்று (07) எழுத்துப்பூர்வமான கோரிக்கையை விடுத்தனர்.

குறித்த  கோரிக்கை கடிதத்தில், “சிறைப்படுத்தப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் அரசாங்கத்தின் பொறுப்பில் இருப்பவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர்கள் விளக்கமறியலில் உள்ளவர்களாக இருக்கலாம்; கைதிகளாக இருக்கலாம். அவர்கள் அரசாங்கத்தின் பொறுப்பிலேயே இருக்கிறார்கள். எனவே,அரசாங்கத்தின் பொறுப்பிலுள்ள கைதிகள் மற்றும் அந்தத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உயிர் பாதுகாப்புத் தொடர்பிலான அடிப்படைப் பொறுப்பு அரசாங்கத்திற்கே உரியது…..” தொகுதி 280 – இலக்கம் 07, 2020 நவம்பர் 30 ஹன்சாட் அறிக்கை

ஜூலை 05 மற்றும் 06 ஆகிய இரண்டு தினங்களுக்குள் நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பாரதூரமான அமைதியின்மை மற்றும் மோதல்கள் காரணமாக, அறிக்கை செய்யப்பட்டுள்ளதன் பிரகாரம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். எனவே, மேற்கூறிய மரணங்கள் மற்றும் காயங்கள் தொடர்பிலான முழுமையான பொறுப்பு அரசாங்கத்தையே சாரும்.

அதற்கிணங்க, இவ்விடயத்திலுள்ள பாரதூரத்தன்மை மற்றும் அவசரத் தன்மையைக் கருத்திற்கொண்டு, இது தொடர்பாக பாராளுமன்றத்தின் அவசர கவனத்தைச் செலுத்துவதற்காக நிலையியற் கட்டளை 19(1) இன் கீழ் அவசர ஒத்திவைப்பு விவாதமொன்றிற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு தங்களிடம் தயவவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here