தெற்கு ஸ்பெயினில் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் மாயமாகியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டினராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லாஸ் கல்லார்டோஸ் நகருக்கு அருகிலுள்ள பெடார் கிராமப் பகுதியில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
தீக்காயங்களுக்கு உள்ளான 8 பேர் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் நால்வர் கடுமையான தீக்காயங்களுடனும், மற்றவர்கள் லேசான தீக்காயங்கள் மற்றும் புகை காரணமாக ஏற்பட்ட மூச்சுத்திணறலாலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காட்டுத்தீ வேகமாக பரவியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




