இந்தியா – இலங்கை மோதும் முதல் டெஸ்ட் போட்டி: இன்று தொடக்கம்!

0
2
dailythanthi

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 48.15 சதவீத புள்ளிகளுடன் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.

இறுதிப்போட்டி வாய்ப்பை வலுப்படுத்துமா?

இந்த தொடரில் இரு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தனது வாய்ப்பை வலுப்படுத்திக் கொள்ள முடியும். இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்திய அணி தீவிரம் காட்டும்.

உத்தேச லெவன்

இந்திய அணியில் லோகேஷ் ராகுல், ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, மானவ் சுதர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணியில் லஹிரு உதரா, நிஷான் பெர்னாண்டோ, தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ், தனஞ்ஜெயா டி சில்வா (கேப்டன்), நிரோஷன் டிக்வெல்லா, சோனல் தினுஷா, பிரபாத் ஜெயசூர்யா, ரமேஷ் மெண்டிஸ், அசிதா பெர்னாண்டோ, லஹிரு குமாரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இப்போட்டி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதனை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here