கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலியா – வங்காளதேசம் நாளை மோதல்!

0
32
dailythanthi

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 13ம் தேதி தொடங்கி நடைபெற்றது.

வங்காளதேசம் வெற்றி

பரபரப்பாக நடந்த இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவை முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்காளதேசம் வரலாறு படைத்தது.

2வது டெஸ்ட்

இந்நிலையில், ஆஸ்திரேலியா – வங்காளதேசம் இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது. மெக்கெ மைதானத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

இப்போட்டியில் வெற்றிபெற்று வரலாற்று சாதனை படைக்க வங்காளதேசம் முயற்சிக்கும். அதேவேளை, ஏற்கனவே ஏற்பட்ட தோல்விக்கு பழிதீர்க்கவும், தொடரை சமன் செய்யவும் ஆஸ்திரேலியா போராடும். இதனால் நாளை நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் கருதுகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here