கண்டியில் இடம்பெற்ற ஆதிவாசிகளின் சம்பிரதாய தேன் பூஜை!

0
26
dailythanthi

நாட்டின் விசேட சமூக குழுக்களில் ஒன்றாக விளங்கும் ஆதிவாசிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பொறுப்புள்ள தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மல்வத்து மகா விஹாரையின் மகாநாயக்கர் வண.திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்தார்.

ஆதிவாசிகளின் தலைவர் ஊருவலிகே வன்னியலத்தோ தலைமையிலான குழுவினர் சம்பிரதாய தேன் பூஜைக்காக ஶ்ரீ தலதா மாளிகைக்கு வருகை தந்த போது மல்வத்து மகாநாயக்க தேரரை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

பரம்பரை பூர்வீக நிலங்களில் அவர்கள் எவ்வித இடையூறுகளுமின்றி பயன்படுத்துவதற்கான சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here