செல்வச்சந்நிதி ஆலய தேர்த்திருவிழா, தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு, பலாலி வீதியில் மக்கள் நடந்து செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் பலாலி வீதியில், கடந்த வருடம் நடந்து செல்வதற்கோ , வாகனங்களில் தரித்து நிற்பதற்கோ அனுமதி மறுக்கப்பட்டு, நேர கட்டுப்பாட்டுடன் வீதி திறந்து விடப்பட்டது.
இந்நிலையில், செல்வச்சந்நிதி ஆலய தேர்த்திருவிழா நாளையதினமும் (27) மற்றும் தீர்த்த திருவிழா நாளை மறுதினம் (28) நடைபெறவுள்ள நிலையில், ஆலயத்திற்கு செல்லும் காவடிகள், பாத யாத்திரைகளுக்காக குறித்த வீதியூடாக காலை 06 மணி முதல் இரவு 09 மணி வரையில் நடந்து செல்லவும், வீதியில் தரித்து நிற்கவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.




