சபைக்கு செல்ல நாமல் எம்.பிக்கு அனுமதி!

0
35
thamilan

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இன்று (08) நடைபெறும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன வழங்கிய அனுமதியின் அடிப்படையில், நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு அழைத்துவரப்படுவார் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக்க பல்லேதன்ன தெரிவித்துள்ளார்.

மேலும், குடும்பத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவை உட்கொள்ளவும் நாமல் ராஜபக்ஷவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here