அணியின் சூழலை புரிந்து கொண்டு களத்தில் எனது வேலையை சரியாக செய்வதே என் ஒரே நோக்கம்!

0
3
dailythanthi

திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 296 ரன் இலக்கை இந்திய அணி 41.4 ஓவர்களில் எட்டிப்பிடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 139 ரன்கள் (10 பவுண்டரி, 9 சிக்சர்) விளாசியதுடன், சில சாதனைகளையும் தகர்த்தார். ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 15 ஆயிரம் ரன்களை கடந்த வீரர். ஒரு நாட்டில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் (இந்தியாவில் 7,006 ரன்கள்) போன்ற சாதனைகளை படைத்தார்.

பின்னர் இதுகுறித்து விராட் கோலி கூறுகையில், ‘உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இதுபோன்ற மைல்கல்கள் மீது எனது கவனம் ஒருபோதும் இருந்ததில்லை. அணியின் சூழலை புரிந்து கொண்டு களத்தில் எனது வேலையை சரியாக செய்வதே என் ஒரே நோக்கம். அப்படி செய்யும் போது சாதனைகள் தானாகவே வந்து சேருகின்றன. இவ்வளவு காலம் கிரிக்கெட் விளையாடி இந்த நிலையை அடைந்திருப்பதற்கு நான் மிகவும் நன்றி உணர்வுடனும், ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் உணர்கிறேன். இந்த அருமையான வாழ்க்கைக்கும், வாய்ப்புகளுக்கும் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்’ என்றார்.

மேலும் கோலி, ‘எனது கிரிக்கெட் பயணத்தில் இந்த காலக்கட்டத்தில் பேட்டிங் வேகத்தை மேலும் ஒரு அடி உயர்த்தி அதிரடியாக ஆட வேண்டும் என்பது எனக்கு நானே வைத்துக் கொண்ட சவால். அதற்காக உழைப்பது உற்சாகம் அளித்தது. வாழ்க்கையின் இந்த கட்டத்தில் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துவது உண்மையிலேயே பரவசமூட்டும் விஷயம். அது இந்தியாவுக்காகவோ அல்லது ஐ.பி.எல். அணிக்காகவோ எங்கு விளையாடினாலும் மனதளவில் சுதந்திரமாக செயல்படுவதற்கும் பெரிதும் உதவுகிறது. அதுவே சிறப்பாக ஆடுவதற்கு கைகொடுக்கிறது’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here