நோர்வூட் மைதானத்தில் மேடை அமைத்து அங்கு மோடியின் வருகைக்காக சகல பொறுப்புகளையும் செய்வதற்கு மலைநாட்டு அபிவிருத்தி அமைச்சுக்கு அரசு வழங்கியிருக்கும்போது அந்த பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கும்போது இன்று அந்த இடத்துக்கு வந்த இதொகாவின் ஆதரவாளர்கள் இழிவான சொற்பிரயோகங்களுடன் கலாட்டாவில் ஈடுபட்டுள்ளனர் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
மோடியின் வருகை தொடர்பில் அனைத்து ஏற்பாடுகளும் எனது அமைச்சின் கீழ் செயற்படும்போது இதற்கு சம்பந்தமில்லாத இதொகாவினர் ஏன் குழப்பத்தை உண்டு பண்ணுகிறார்கள் என்றே தெரியவில்லை?
இன்று கொட்டக்கலையில் இடம்பெற்ற இதொகாவின் கூட்டத்தை தொடர்ந்து இந்த வன்முறைக்கு திட்டமிடப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார், இந்த திட்டமிட்ட செயலை தான் வன்மையாக கண்டிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.