அட்டனில் ஒரு பிரபல்ய உல்லாசவிடுதி அதன் உரிமையாளர் அந்த விடுதியை மூன்று மாடிகளாக உயர்த்தினார் உடனே அதற்கு எதிராக மாநகரசபை வழக்கு தொடர்ந்தது, மாநகர சட்டவிதிகளை மீறி அந்த கட்டிடம் அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு.
இந்த விடுதி உரிமையாளர் மலையகத்தை சேர்ந்த ஒரு அமைச்சரின் நெருங்கிய நண்பரும்கூட, மாநகரசபை தொடர்ந்த வழக்கை மீண்டும் “அப்பீல் செய்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை கட்டிடம் அப்படியே கிடக்கிறது, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மலையகத்தின் பிரதான கட்சி ஒன்று அந்த விடுதி உரிமையாளரை அணுகியது , தாம் உடனடியாக பிரச்சினையில் தலையிட்டு உங்களுக்கு சாதகமான முடிவை பெற்றுத்தருகிறோம் “ஆனால் ஒரு நிபந்தனை அந்த அமைச்சரை எங்களோடு இணைக்க ஒத்துழைப்பை நல்க வேண்டும் என பவ்வியமாக கேட்டுள்ளனர், இதை கேட்ட அமைச்சரின் நண்பரும் அந்த விடுதியின் உரிமையாளரும் இரண்டாம் கெட்ட நிலையில் ஓடித்திரிகிறாராம்?
பகவான் கிருஷ்ணனே இது என்ன வம்பு உனது பெயரை வைத்து ஆரம்பித்த இந்த விடுதியால் அரசியலும் சேர்ந்து விளையாடுகிறது என்ற வேதனையில் இருக்கின்றாராம்? இந்த மலையக கட்சியோ விடுவதாக இல்லையாம், பேரம் என்னாச்சு என்ற வகையில் தொடர்பிலேயே இருக்கிறதாம்.