கட்டாரில் இருந்து இலங்கை வருவோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டார் ரியாலை, இலங்கை ரூபாய்க்கு மாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் உள்ள வங்கி கிளையினால் கட்டார் ரியால் மாற்றுவதை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் அறிவிக்கும் வரை கட்டார் ரியால் மாற்ற வேண்டாம் என மத்திய வங்கியினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக விமான நிலைய வங்கி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
கட்டார் அரசாங்கத்துடன் இராஜதந்திர உறவை 6 மத்திய கிழக்கு நாடுகள் நிறுத்தியுள்ளன. இதனைத் தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.