இலங்கையிலுள்ள பௌத்த மதத்துக்கான மூன்று பீடங்களை சேர்ந்த மகாநாயக்க தேரர்களும், ஏனைய சங்க அமைப்புகளிலும் தேரர்களும், இலங்கையில் புதிய அரசமைப்புக்கான தேவை எழவில்லை எனவும் தற்போது இருக்கும் அரசமைப்பு போதுமானது என ஏகோபித்த முடிவை எடுத்துள்ளனர்.
மல்வத்தை அஸ்கிரிய பீடாதிபதி தலைமையில் அமரகுரு நிக்காய மற்றும் ராமநாய நிக்காய போன்ற பீடங்களை உள்ளிட்ட சுமார் 75 தேரர்கள் ஒன்று கூடி நேற்று இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
அதன்போது, தற்போது காணப்படும் அரசமைப்பைத் தொடர்ந்தும் வைத்திருப்பதே, மிகவும் பொருத்தமானது என அவர்கள் தீர்மானித்தனர். தேவைப்பட்டால் மாத்திரம், தேர்தல் முறைமை மாத்திரம் மாற்றப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
தாம் எடுத்த இந்த தீர்மானத்தை நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளனர்.
பௌத்தர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக, விசேட செயற்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.