டயகமையில் உப அதிபரின் தில்லாலங்கடி!

0
150

டயகம நகருக்கு அண்மித்த பகுதியில் உள்ள டயகம தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் இடமாற்றம் பெற்று சென்றுள்ள நிலையில் அப்பாடசாலையின் உப அதிபாரக கடமையாற்றி வந்த ஆசிரியர் இப்போது அந்த பாடசாலையின் அனைத்து பொறுப்பையும் கையாண்டு வருகிறார் பாடசாலை நிர்வாகத்திலும்,மாணவர்களிடையேயும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றார் என முறைப்பாடுகள் எழுந்துள்ளன.

டயகமையில் தமிழ் வித்தியாலயத்துக்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலை கற்றல் உபகரணங்கள் விற்பனை செய்யும் வியாபார நிலையத்தில் எந்த பொருட்களும் வாங்க கூடாது என்ற கடும் உத்தரவாம், தான் சொல்லும் கடையில் மட்டுமே கற்றல் உபகரணங்களை வாங்க வேண்டும் என மாணவர்களுக்கு கட்டளையாம்?

மாணவர்கள் மேற்படி உப அதிபர் குறிப்பிட்ட கடையில் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கு ஏற்ப அங்கு “கமிஷனும் கிடைக்கிறதாம்” பாவம் அந்த பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் உள்ள கடையில் பொருட்களை வாங்கினால் அந்த மாணவர்களை அவர் கவனிக்கும் விதமே தனியாம், பல மாணவர்களை பொய் காரணங்களை கூறி தண்டிப்பதில் பின்வாங்குவதே கிடையாதாம்?

இவருக்கு அரசியல் பின்னணி ஒரு காரணமாக இருப்பதால் அந்த கடையின் உரிமையாளரை அவர் எப்போதும் எதிரியாகவே பார்க்கிறாராம்” ஆத்திரமுற்ற கடை உரிமையாளர் பொலிஸ் நிலையம் சென்றும் இதுபற்றி முறையிட்டு உள்ளாராம், இந்த பாடசாலையை நம்பி பாடசாலை உபகரணங்களை விற்பனை செய்ய ஆரம்பித்த மேற்படி கடை உரிமையாளர் இரண்டும் கெட்டான் என்ற நிலைக்கு வந்துள்ளாராம் வாழ்க அந்த பாடசாலையின் உப அதிபர், அரசியலையும் தன் வருமானத்தையும் அவர் கைவிடுவதாகவே தெரியவில்லையாம்.

கருடனின் பார்வைக்கு நலன் விரும்பி ஒருவர் இந்த விடயத்தை கசியவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here