கொட்டலை பகுதியில் விபத்தினால் கடும் சேதமாகிய ரயில் தண்டவாளம் திருத்தப்பணி மூன்று நாநாட்களின் பின்னர் நிறைவடைந்துள்ளதாக சிரேஸ்ட பொறியியலாளர் ரஞ்சித் சிஜேசிரி தெரிவித்தனர்
கடந்த 13 ம் திகதி கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற இரவு நேர தபால் ரயில் சேவை அதிகாலை 2.30 மணியளவில் கொட்டகலை ரயில் நிலையத்தை அண்மித்த 60 அடி ரயில் பாலத்தில் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டூ விபத்துக்குள்ளானது
விபத்தினால் மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்படைந்திருந்த நிலையில் கொழும்பு கம்பளை நாவலப்பிட்டி ரயில்வே திணைக்களை அதிகாரிகளும் ஊழியர்களும் தொடர்ச்சியாக திருத்தப்பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் சேதமாகிய தண்டவாளப்பாதைகள் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் விபத்தினால் சேதமாகியுள்ள 150 வருடம் பழமை வாய்ந்த 60 அடி உயரமான பாலமும் கடும் சேதமாகியுள்ளது பாலம் முழுமையாக திருத்தியமைக்க மூன்றுவாரங்கள் செல்லும் எனவும் தெரிவித்தார் அது வரையில் கொழும்பு ஹட்டன் வரையிலும் பதுளை கொட்டகலை வரையிலும் ரயில் மலையக ரயில் சேவை இடம்பெறும் எனவும் தெரிவித்தார்
தண்டவாளத்லிருந்து தடம் புரண்ட ரயில் பெட்டிளை அற்ற கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட( கிரேன்) பாரம் தூக்கி ரயில் பாலம் சேதமானமையினால் விபத்துக்குள்ளான லயில் பெட்டிகளை அகற்ற பயன்படுத்த முடியாத போதிலும் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கடும் பிரயத்தனத்தினூடாக ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டு தண்டவாளம் புணரமைக்கப்படுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்- புத்தனை நிருபர்.