நாடாளுமன்றில் வரும் 24 அன்று சமர்ப்பிக்கப்படும் சட்டமூலம் மலையகத்துக்கு பாதிப்பு என்றால் ம ம முன்னணி எதிர்க்கும்!

0
164

நடைபெற இருக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தொடர்பாக 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில சமர்பிக்க இருக்கும் சட்டம் மலையக மக்களுக்கு சாதகமாக இல்லாவிட்டால் அதற்கான எதிர்ப்பை பாராளுமன்றத்தில் தெரிவிக்க உள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கபட்டுள்ளது.

மலையக மக்கள் முன்னனியின் மத்திய குழு கூட்டம் நுவரெலியா பிரதேச செயலகத்தில் கல்வி இராஜாங்க அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன் போதே இந்த தீர்மானம் எடுக்கபட்டதாக மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டனியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் கருத்து தெரிவித்தார்

தொடர்து இந்த தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர். புதிய முறையிலான உள்ளுராட்சி தேர்தல் திருத்ததின் ஊடாக சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக பெரும்பான்மை மக்கள் வாழும் பிரதேசங்களிலும் பரவவலாக வாழும் பிரதேசங்களிலும் மலையக மக்களுக்கு வட்டார தேர்தல் முறைமை பாதிக்காமல் இருக்க வேண்டும்.

இந்த முறை மலையக மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலேயே தற்போது காணப்படுகின்றது. வட்டாரங்கள் பிரிக்கும் போது சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்க கூடாது. இந்த பிரச்சனைக்கு ஒரு திர்வை பெற வேண்டுமானால் சிறுபான்மை கட்சிகளான மலையக கட்சிகள்¸ முஸ்லிம் கட்சிகள் உட்பட ஏனைய சிறுபான்மை கட்சிகள் ஒன்றினைய வேண்டும். இதற்கு மலைய மக்கள் முன்னனி¸ தமிழ் முற்போக்கு கூட்டணி ஆயத்தமாக உள்ளது.

நாங்கள் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளாக இருந்தாலும் எம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது உரிய இடத்தில் எங்கள் எதிர்ப்பை ஏற்படுத்துவோம். இதனையே எமது கட்சியான மலையக மக்கள் முன்னணி தனது மத்திய குழு கூட்டத்தில் தீர்மானித்தது தற்போது இலங்கையில் உள்ள இரண்டு பெருபாண்மை கட்சிகளும் இதற்கு ஆதராவாக இருப்பாதால் சிறுபான்மை கட்சிகளின் அபிலாசையை தட்டிவிட்டு நிறைவேற்ற பெறுபான்மை கட்சிகள் எத்தநிக்க கூடாது. வருகின்ற 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இதற்கான சட்ட மூலம் வர இருகின்றது. இந்த சட்ட மூலம் சிறுபான்மை மக்களுக்கும் குறிப்பாக மலையக மக்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என கூறினார்.

இந்த கூட்டத்தில் மத்திய குழுவின் அங்கத்தவர்கள் உட்பட மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டனியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன்¸ பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னனியின் அரசியல்துறை தலைவருமான ஏ.அரவிந்தகுமார்¸ முன்னனியின் செயலாளர் நாயகம்¸ ஏ.லோரன்ஸ்¸ மத்திய மாகான சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம்¸ பேராதனை பல்கலைகழக சிரேஷ்ட வரிவுரையாளரும் மலையக மக்கள் முன்னணியின் நிதி செயலாளருமான எஸ்.விஜயசந்திரன்¸ மலையக தொழிலாளர் முன்னனியின் நிதி செயலாளர் எஸ் விஸ்வநாதன்¸ மலையக மக்கள் முன்னனியின் பிரதி செயலாளர் செல்வி அனுஷா சந்திரசேகரன்¸ மலையக தொழிளாலர் முன்னனியின் பொது செயலாளர் கே.சுப்பிரமனியம். சிரேஷ்ட பிரதி தலைவர்களான எஸ்.கிருஸ்ணன் எஸ்.ஜெயபாரதி பனிப்பாளர் எம் கனகராஜ்¸ நிர்வாக செயலாளர் எஸ் அஜித்குமார். முன்னணியின் பிரதி பிரதி பொது செயலாளர் ஏம் பிரசாந் உட்பட பலர் கலந்துக் கொண்டார்கள்.

பா. திருஞானம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here