மஸ்கெலியா பகுதி என்பது அதிகூடிய தோட்டங்களையும் தோட்டப்புற மக்களையும் சூழ்ந்த ஒரு பகுதியாகும் இந்த பகுதில் வாழும் மக்களுக்கு இருக்கும் ஒரே வைத்தியசாலை மஸ்கெலியா நகரில் உள்ளது அனால் இந்த வைத்தியசாலையில் அடிப்படை வசதிகள் இல்லை, தடிமலுக்கு மருந்து எடுக்க வந்தாலே நோயாளர்கள் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், கர்ப்பிணி பெண்களுக்கு “ஸ்கேன் செய்யும் ஒரு இயந்திரம் இல்லாமல் இயங்கும் இலங்கையில் ஒரே வைத்தியசாலை இதுவாக மட்டுமே இருக்கும், இந்த வைத்தியசாலைக்கு வரும் கர்ப்பிணி பெண்களை “ஸ்கேன் எடுப்பதற்கு தனியார் கிளினிக்குகளுக்கு செல்லுமாறு பரிந்துரைக்கப்படுகிறதாம் இலவசமாக செய்ய வேண்டிய ஒன்றை பணம் கொடுத்து செய்வதற்கு தோட்ட பெண்கள் எங்கே செல்வார்கள்?
மஸ்கெலியாவில் உள்ள தனியார் கிளினிக்கில் ஸ்கேன் செய்வதற்கு சுமார் 2 ஆயிரம் வேண்டும் காட்மோர் கலகந்தையில் இருந்து கிளங்கன் வைத்தியசாலைக்கு வருவதென்றால் 40 கிலோ மீட்டர் பஸ்ஸுக்கு 90 ரூபா வேண்டும், மேற்படி வைத்தியசாலையில் பணியாற்றுபவர்கள் ஸ்கேன்” செய்வதற்காக வரும் கர்ப்பிணிகளை தனியார் கிளினிக்கு செல்லுமாறு வேண்டுவதில் காரணம் இருக்க கூடும்? இவர்கள் தனியார் கிளினிக் உரிமையாளர்களிடம் கமிஷன் பெறக்கூடும் என சந்தேகம் எழுகின்றது.
இது தொடர்பாக மலையக அரசியல்வாதிகளின் காதுகளுக்கு எட்டப்பட்டாலும் இது தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்துவதாக இல்லை, தோட்டங்களுக்கு ரோட்டு போடுபவர்கள் வயிற்றில் கருவை சுமந்துகொண்டு திரியும் மஸ்கெலியா பகுதிகளில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களின் கஷடத்தை போக்குவார்களா? கர்ப்பிணிப் பெண்கள் பிரசவ காலத்துக்கு முன்னர் சுமார் நான்கு முறையாவது வயிற்றில் இருக்கும் கருவின் சுவாசம், கருவின் வளர்ச்சி என்பன தொடர்பில் ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும் என்பதை சமூக சிந்தனை கொண்டவர்கள் தெரிந்து கொள்ளல் வேண்டும், இந்த விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.