அண்மையில் மலையகத்தில் இடம்பெற்ற சாகித்திய விழா சகல மலையத்தில் கலைஞர்களையும், ஊடகவியலாளர்களையும் கௌரவிக்கும் ஒரு நிகழ்வாக அமைந்ததா? இது ஒரு கட்சி சார்பான ஒரு நிகழ்வாக அமைந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன, மலையக ஊடகவியலாளர்கள் சிலர் கௌரவம் பெற்றதை வாழ்த்துவதோடு புறந்தள்ளப்பட்டு ஊடகவியாளர்கள் தொடர்பில் கவலையும் அளிக்கிறது, ஏன் இந்த பாகுபாடு? மலையகத்தில் மூத்த ஊடகவியலாளர்கள் என்ற ரீதியில் அங்கு வெளிவரும் இரண்டு மலையக அச்சு ஊடகங்களின் பிரதான ஊடகவியலாளர்களை அமைச்சர் ராமேஸ்வரனுக்கு தெரியாமல் போனது வேடிக்கையானது? சாகித்திய விழா அரசியல் சார்பற்றது என்று அவர் விழித்திருந்தாலும் அங்கு இடம்பெற்றவை அனைத்தும் அரசியல், மலையகத்தின் மூத்த எழுத்தாளர்கள் மு. சிவலிங்கம், தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா என ஒரு இலக்கிய வட்டாரம் புறக்கணிக்கப்பட்டுள்ளது, அதைவிட தோட்டப்புற கலைஞர்கள் என ராமேஸ்வரனின் பட்டியலில் காணாமற் போனது ஏனோ? சாகித்திய விருது என்பது கலைஞர்களையும், எழுத்தாளர்களையும், ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகள் இவர்களை கௌரவம் செய்வதுதானே? மலையக பாரம்பரிய கலைகளில் தேர்ச்சிபெற்ற எத்தனையோ மூத்தவர்கள் இந்த தோட்டங்களுக்குள் முடங்கி கிடக்கிறார்கள் என்பதை ஏன் இந்த சாகித்திய விழாவை ஏற்பாடு செய்த குழுவுக்கு தெரியவில்லை? கட்சிரீதியாக கலைஞர்கள் வகைப்படுத்தப்படுவது காலத்துக்கு ஏற்ற விடயமல்ல, காலங்கள் இவற்றை பதிவு செய்து கொண்டே இருக்கும்.