கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வீதி அபிவிருத்தி மற்றும் உயர்கல்வி அமைச்சரும் பாராளுமள்ற சபை முதல்வருமான லக்ஸ்மன் கிரியல்ல அவர்களின் புஸ்ஸல்லாவ பிரதேச ஆதரவளர்களிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இரு குழுக்களாக பிரிந்து நகரத்தில் பிரதான பாதையில் வசந்தா சினிமா மண்டபத்திற்கு அருகில் ஒரு குழுவும் நகர புதிய சந்தை தொகுதி அருகில் ஒரு குழுவினரும் ஆர்ப்பாட்டத்தில் இன்று (05.11.2017) ஈடுபட்டனர்.
குறித்த பிரசேத்தில் அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக செயற்பட்டு வரும் அசோக ஹெயரத் என்பரின் செயற்பாடுகள் ஒரு பகுதியினருக்கு திருப்தியாகவும் ஒரு பகுதியினருக்கு திருப்தி இன்மை காரணமாகவும் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இந்த ஆர்பாட்டத்திற்கு காரணமாக இருந்துள்ளது. மக்கள் தொடர்பாடல் அதிகாரிக்கு எதிரானவர்கள் இவரின் தன்னலமான செயற்பாடியால் எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் உள்ளுராட்சி சபைக்கான தேர்தலில் தங்களுக்கு ஆசனம் வழங்கபடவில்லை எனவும் புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் அபிருத்திகள் ஸ்தம்பிதம் அடைவதாகவும் மோஷடிகள்
துஸ்பிரயோகங்கள் நடைபெருவதாகவும் தங்களிடம் கலந்து உரையாடாமல் புஸ்ஸல்லாவ பிரதேசத்திற்கு புதிய அமைப்பாளர் நியமித்து உள்ளதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாங்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபடுவதாக கூறினர். இதற்கு கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வீதி அபிவிருத்தி உயர்கல்வி அமைச்சரும் பாராளுமள்ற சபை முதல்வருமான லக்ஸ்மன் கிரியல்ல அவர்கள் உடனடி தீர்வை ஏற்படுத்தி ஐ..தே.கடசியை வழி நடத்துமாறு கோரிக்கை விட்டனர்.
மக்கள் தொடர்பாடல் அதிகாரிக்கு ஆதரவான குழுவினர் மேற்படி குற்றசாட்டுகள் பொய்யானவை என்றும் குறித்த நபர்கள் மோஷடி மற்றும் வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் நாங்கள் கட்சியின் பழைய அங்கத்தவர்கள் மக்கள் தொடர்பாடல் அதிகாரியினால் புஸ்ஸல்லாவையில் பல அபிவிருத்திகள் ஏற்பட்டள்ளன அவருக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வீதி அபிவிருத்தி மற்றும் உயர்கல்வி அமைச்சரும் பாராளுமள்ற சபை முதல்வருமான லக்ஸ்மன் கிரியல்ல அவர்கள் எங்களுடனும் இருக்கின்றார். என்றும் கருத்து தெரிவித்தனர். எது எவ்வாறாயினும் ஒரு கட்சிக்குள்ளேயே இரு குழுக்கள் உருவாகி மோதல்கள் ஏற்படுவது எதிர் வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் ஐ.தே.கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொது மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மிகவும் அமைதியாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் குறித்த நேரத்தில் கலைந்துச் சென்றது.
பா. .திருஞானம்