லிந்துல்ல வைத்திசாலை அவலம்; மலையக அரசியல்வாதிகள் அசமந்தம்!

0
194

மலையக அரசியல் வாதிகளின் பார்வை எப்போது லிந்துலை பிரதேச வைத்தியசாலை பக்கம் திரும்பபோகின்றதோ என நினைத்து ஏங்கும் லிந்துலை பிரதேச மக்கள்.
லிந்துலை வைத்தியசாலை இப்பிரதேச மக்களுக்கு மிகவும் முக்கிய மானதாகும் அண்மைகாலமாக இவ்வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களின் செயல்பாடுகள் மிகவும் மோசமான நிலையே காணப்படுகின்றது.

DSC09553
இங்கு கடமையாற்றும் வைத்தியர்களுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் மத்தியில் தொடர்ச்சியாக முறன்பாடுகள் தொடர்வதால் நோயாளர்களை கவனிப்பதில் ஏட்டிக்கு போட்டியாக கவனிப்புகள் நடைபெறுவதாக வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் சொல்லி புலம்புகின்றனர்.
இவ்வைத்தியசாலையில் இடம்பெற்ற அபிவிருத்தி பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது வைத்திய சிகிச்சைக்காக செல்லும் நோயாளர்கள் பல மணிநேரம் வைத்தியர்களை சந்திப்பதற்காக காத்திருக்கவேண்டிய அவல நிலை தொடர்கின்றது.
வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் சிலர் பத்து வருடத்திற்கு மேலாக கடமையில் இருப்பதால் வைத்தியசாலை நிர்வாக நடவடிக்கைகளுக்கு முற்றுக்கட்டையாக இவர்கள் செயல்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

DSC09533
வைத்தியர்கள் சிலர் நேரம் காலம் பாராமல் பணியாற்றுவதை காணகூடியதாக உள்ளது.
அதிகமான தோட்டபுறங்களை சேர்ந்த மக்களே இவ்வைத்தியசாலைக்கு வருகின்றனர்
இங்கு அடிக்கடி வைத்தியர்களும் ஊழியர்களும் பணிபகிஷ;கரிப்பில் ஈடுபடுவதால் சிகிச்சைக்காக வரும் நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்குவதுடன் வருமான ரீதியாக தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைத்தியர்களின் அசமந்த போக்கினால் பரிதாபமான நிலையில் சிசு உயிர்யிழந்த சம்பவமொன்று இவ்வைத்திய சாலையில் பதிவாகியது.
இதேவேளை இப்பிரதேசத்தினை சேர்ந்த சங்கர் என்பவர் சுகயீனம் காரனமாக அவரின் உறவினர்கள் மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அன்று இரவு கானாமல் போனதுடன் மறுநாள் வைத்தியசாலை பகுதியல் உள்ள பள்ளத்தி;ல் இருந்து பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களின் பின் இறந்துள்ளார் இவ்வாறான அதிர்ச்சியான சம்பங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றனர்.

DSC09548
இவ்வாறான சம்பவங்கள் காரனமாக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் தொகை குறைவடைந்துள்ளது.
இது இவ்வாறு இருக்கையில் கடந்த 13 ம் திகதி முதல் வைத்தியர்கள் உட்பட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுவருகின்றனர். வைத்தியர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறன்பாடுகளையடுத்து இவ்வேலை நிறுத்த போராட்டம் தொடர்கின்றது.
இதனால் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதுடன் இரண்டு நாளாக தொழிலையும் இழந்து போக்குவரத்திற்கு பணம் செலுத்தி சிகிச்சை பெறமுடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் துயரமான சம்பவங்கள் இடம்பெருகின்றன
தற்போது உள்ளுராட்சி சபை தேர்தல் சூடு பிடித்துள்ள நிலைiயில் மலையக அரசியல் வாதிகள் மக்களை சந்திப்பதற்காக இரவும் பகலாக களத்தில் இறங்கியுள்ளனர் ஆனால் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படையான சுகாதார நடவடிக்கைகளை கூட அரசியல் வாதிகள் அக்கரை காட்டாடமல் இருப்பதற்கு உதாரணமாக விளங்குவது லிந்துலை வைத்தியசாலை.
இவ்வைத்தியசாலை தொடர்பாக ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்திகள் வெளியிட்ட போதிலும் மலையக அரசியல் வாதிகள் இதனை கண்டும் காணதவர்கள் போல் இருப்பது வேடிக்கையாக உள்ளது.
எனவே மக்களின் வாக்குகளை பெற்று அரசியல் தலமைகளாக இருக்கின்ற தொண்டமான் திகாம்பரம் போன்றவர்களின் கண்களுக்கு லிந்துலை வைத்தியசாலையின் நிலமை தொடர்பாக தெரியாமல் இருப்பதும் ஏன் மக்களுக்கு சேவைகளை செய்வதாக கூறும் இவர்கள் இவ்வாறான பிரச்சனைகளுக்கு தலையிடாமல் இருப்பது மக்கள் மத்தியில் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனவே இப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும் இப்பிரச்சனைக்கு பதில் கூறவேண்டியது மலையக அரசியல் வாதிகளின் கடமையாகும்.

துவாரக்ஷன் அக்கரப்பத்தனை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here